நாடு முழுவதும் போராட்டத்திற்கு தயாராகும் வைத்தியர்கள்: சிக்கலில் நோயாளிகள்
நாடு முழுவதும் அமைதி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (12.09.2023) பிற்பகல் 12.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் என மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த போராட்டம் காரணமாக இன்று பிற்பகல் வைத்தியசாலைகள் செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டங்கள் நடைபெறும் இடங்கள்
இதனடிப்படையில் போராட்டங்கள் நடைபெறும் இடங்கள் தொடர்பிலும் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.குறித்த இடங்கள் வருமாறு,
காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலை,மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை,தங்காலை பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவும்,பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாகவும்,அம்பாறை மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாகவும்,தெஹி அட்டகண்டிய ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும், கல்முனை - அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவும்,கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவும்,புத்தளம் ஹலவத்தை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவும்,கேகாலை மாவட்டம் - கேகாலை பொது வைத்தியசாலைக்கு முன்பாகவும், இரத்தினபுர போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும்,அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும்,மன்னார் மாவட்ட மருத்துவமனை முன்பாகவும்,முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை முன்பாகவும்,வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவும்,கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாகவும் இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தினை சேர்ந்த மருத்துவர்கள் வைத்தியசாலையின் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மருத்துவமனை முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இன்று நண்பகல் 12.30 தொடக்கம் 2.00 மணிவரை இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |