வசதிகளை கோரி சிகிச்சை நிலையங்களில் அச்சுறுத்தும் தொற்றாளர்கள் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கோவிட் தொற்றாளர்கள் அங்குள்ள சில வசதிகளின் குறைப்பாடுகள் காரணமாக பொது சுகாதார பரிசோதகர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், அச்சுறுத்தல் விடுப்பதாகவும் பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் வெறுப்பில் இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குள் இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பார்க்காத அனர்த்தமான நிலைமை ஏற்பட்டுள்ளதால், சிறிய குறைப்பாடுகளை பொறுத்துக்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவிட்டை கட்டுப்படுத்த தற்போது கையாளப்படும் முறைகள் மூலம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதை குறைக்க முடியாது என்பது கீழ் மட்ட நிலைமைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
