டொலருக்கு பெரும் நெருக்கடி! - இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை சமாளிக்க மூன்று வெளிநாடுகளிடம் இருந்து கடனுதவி பெறுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
இதன்படி, சீனா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகள் இத்தகைய கடன்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அமைச்சரவைக்கும் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, 1400 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக நிதி அமைச்சர் இறுதி அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு அமெரிக்க தூதுரகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அரசாங்க தரப்பில் உள்ள சிலரும் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது பொறுத்தமானது என கூறிவரும் நிலையில், இலங்கை அரசு தொடர்ந்தும் அந்த கோரிக்கையினை புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
