அரசாங்கம் அனைத்து துறைகளிலும் தோல்வி : மொட்டு கட்சி குற்றச்சாட்டு
அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக்க இந்தக் குற்றச்சாட்டை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி திட்ட மூலதன செலவுகள் கீழ் மட்டம் வரையில் சென்றடைவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே நாட்டின் அபிவிருத்தி வேகம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மூலதன செலவுகளை நடைமுறைப்படுத்த முடியாத அரசாங்கம் அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொருாளதார வளர்ச்சி வேகம் குறைந்து பணவீக்கம் அதிகரித்துள்ளதாக டி.வீ சானக்க குற்றம் சுமத்தியுள்ளார்.