கல்வி சமூகத்தை சீரழித்த அரசாங்கமே வெளியேறு..!-அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்தினர் போராட்டம் (Video)
இலங்கை அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்தினால் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு- ஆமர்வீதியில் இவ் எதிர்ப்பு ஆர்பாட்டம் அதிபர்கள், ஆசிரியர்கள் மறறும் பெற்றோரினால் முன்னெடுக்கப்பட்டது.
தற்போது நாட்டில் மாணவர்களின் கல்வி நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளது. இதற்கான முழுப்பொறுப்பினையும் ராஜபக்ச அரசாங்கமே ஏற்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
பாதிக்கப்படும் மாணவர்கள்
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் பாடசாலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டு்ள்ளது. இதனால் கல்வியை தொடர்ச்சியாக மாணவர்களுக்கு வழங்க முடிவதில்லை.
அதே சமயம் மாணவர்கள் போஷாக்கான உணவின்றி மந்த நிலைக்கு செல்கின்ற துர்பாக்கியமான நிலை ஏற்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் உடனடியாக தீர்வு வழங்கவேண்டும் என இவ் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் தற்போது உள்ள கோட்டாபய , ரணில் விக்ரமசிங்க அரசாங்கமே இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். கல்வியை வீணடிக்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பார்களாக இருந்தால் இவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் இப் போராட்டமானது கடந்த 22ஆம் திகதி குருணாகலில் முன்னெடுக்கப்பட்டது. இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டில் பல இடங்களிலும் இந்த போராட்டத்தை முன்னெடுப்போம் என இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் (Photos) |

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
