அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கை குறித்து கேள்வி எழுப்பும் தயான் ஜயதிலக்க
இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கை தொடர்பில் தெளிவற்ற நிலை காணப்படுவதாக முன்னாள் சிரேஸ்ட ராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு பாதகமாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தர்க்க ரீதியாக நிராகரித்த விடயம் குறித்து ஜெனிவாவிற்கான இலங்கையின் பதிவிடப் பிரதிநிதியை பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தர்க்க ரீதியாக நிராகரிக்கப்பட்டாலும் இந்த தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கயை ஏன் இலங்கை முன்வகை்கத் தவறியது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை வாக்கெடுப்பு கோராத காரணத்தினால் இலங்கை குறித்த தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை மிகவும் வருந்தத்தக்க விடயம் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கோரியிருந்தால் இலங்கைக்கு ஆதரவான சில நாடுகள் குரல் கொடுத்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
வாக்கெடுப்பின்றி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை சர்வதேச அரங்கில் இலங்கை தொடர்பிலான நன்மதிப்பை குறைவடைய செய்யும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இது பாதகமான நிலை எனவும் இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கை என்ன என்பது தமக்கு புரியவில்லை எனவும் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.




