அரசின் பாரிய நிர்வாக தோல்வி! எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்துள்ள 8 பிரதான கேள்விகள்

Sajith Premadasa Government Of Sri Lanka Job Opportunity Ministry of Foreign Affairs - sri lanka
By Dhayani Nov 07, 2026 09:39 AM GMT
Report

நாட்டில் பட்டதாரிகளுக்கும் இளைஞர்களுக்கும் தேவையான தொழில்வாய்ப்புகளை உருவாக்க அரசால் முடியாமல் போவது, தற்போதைய அரசின் பாரிய நிர்வாக தோல்வியையே காட்டுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று விசேட கூற்றை முன்வைத்து அரசிடம் கேள்விகளை எழுப்பி உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள்

"இலங்கை தற்சமயம் எதிர்கொள்ளும் முக்கிய பேரியல் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் வேலைவாய்ப்பின்மை மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

அரசின் பாரிய நிர்வாக தோல்வி! எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்துள்ள 8 பிரதான கேள்விகள் | Government Failure Sajith Questions

குறிப்பாக இளைஞர்களுக்கும் உழைக்கும் வயதுடைய மக்களுக்கும் போதுமான மற்றும் நிலைபேறான தொழில்வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் சமூக நிலைபேற்றுத் தன்மையையும் பாதிக்கும் பாரதூரமான ஒரு பிரச்சினையாகும்.

எனவே, நாட்டில் நிலவும் தற்போதைய வேலைவாய்ப்பின்மை நிலவரம், அதன் பரவல் மற்றும் அதனைச் சரிசெய்வதற்கான அரசின் கொள்கை மற்றும் நடைமுறை வேலைத்திட்டங்கள் என்பன குறித்து அரசிடமிருந்து தெளிவான பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கின்றேன்" என்று கூறி 8 பிரதான கேள்விகளைச் சபையில் சமர்ப்பித்துள்ளார்.

அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய 8 பிரதான கேள்விகள்

01. தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்கள்: இலங்கையின் தற்போதைய வேலைவாய்ப்பின்மை நிலவரம் குறித்து அரசிடம் காணப்படும் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின் பிரகாரம், தொழிலற்றவர்களின் எண்ணிக்கை மற்றும் வேலைவாய்ப்பின்மை விகிதம் யாவை? இதனை வயதுப் பிரிவு, கல்வித் தகுதி மற்றும் பாலின ரீதியாக வெவ்வேறாக விவரிக்க முடியுமா? இத்தரவுகள் மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் திரட்டப்பட்டுள்ளனவா?

02. பொருளாதாரப் பிரச்சினை ஏற்றுக்கொள்ளல்: தற்சமயம் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பாரதூரமான ஒரு பேரியல் பொருளாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பதை அரசு ஏற்றுக்கொள்கின்றதா?

03. எதிர்கால இலக்குகள்: நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அரசு கண்டறிந்துள்ள வழிமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்கள் யாவை? அடுத்த 3 ஆண்டுகளில் ஆண்டுதோறும் எத்தனை புதிய தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது?

அரசின் பாரிய நிர்வாக தோல்வி! எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்துள்ள 8 பிரதான கேள்விகள் | Government Failure Sajith Questions

04. முதலீட்டு மூலோபாயங்கள்: நாட்டில் வேலைவாய்ப்பின்மையைக் குறைப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதில் அரசு பின்பற்றும் முதலீட்டு மூலோபாயங்கள் யாவை? இந்த முதலீடுகள் மூலம் எத்தனை நேரடி மற்றும் மறைமுகத் தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

05. நிதி மதிப்பீடு: நாட்டில் நிலவும் வேலைவாய்ப்புப் பிரச்சினையை நடைமுறை ரீதியாகவும் நிலைபேறான வகையிலும் தீர்ப்பதற்குத் தேவைப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு, பொது மற்றும் தனியார் முதலீடுகளின் அளவை அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளதா? ஆமெனில், இதற்கான முதலீட்டுத் தேவை மதிப்பீடு மற்றும் அதனை அடைந்துகொள்வதற்கு வகுக்கப்பட்டுள்ள உத்தேச நிதி மூலோபாயம் யாது?

06. சந்தை தேவைகளுக்கான ஆய்வுகள்: தொழில் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், வேகமாக மாறிவரும் தொழில் சந்தையின் தன்மை, தொழில் கட்டமைப்பு மற்றும் எதிர்கால தொழில் தேவைகள் குறித்து அரசு மேற்கொண்டுள்ள மூலோபாய மதிப்பீட்டு ஆய்வுகள் யாவை?

07. தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு: கல்வி மற்றும் தொழில்முறைத் தகுதிகளுக்குப் பொருந்தாத தொழில்களைச் செய்வதையும், தொழிலாளர் திறனை முறையற்ற வகையில் பயன்படுத்துவதையும் குறைக்கும் அதேவேளையில், தொழில்களின் தரம், உற்பத்தித்திறன் மற்றும் ஊதிய அளவுகளை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் காணப்படும் குறிப்பிட்ட வேலைத்திட்டங்கள் யாவை?

08. புதிய தொழில்முயற்சியாண்மை: வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினைக்குத் தீர்வாகப் புதிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதையும் தொழிற்றுறையை ஊக்குவிப்பதையும் அரசு ஏற்றுக்கொள்கின்றதா?

ஆமெனில், புதிய தொழில்முயற்சிகளை ஆரம்பித்தல், அதனைப் பேணிச் செல்லல் மற்றும் விரிவுபடுத்தல் என்பவற்றுக்காக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிதி, தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியான நடவடிக்கைகள் யாவை? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதிகாலை வீடொன்றில் இடம்பெற்ற கொடூரம்! ஒருவர் வெட்டிக்கொலை: மனைவி மற்றும் மகள் படுகாயம்

அதிகாலை வீடொன்றில் இடம்பெற்ற கொடூரம்! ஒருவர் வெட்டிக்கொலை: மனைவி மற்றும் மகள் படுகாயம்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US