சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் தோல்வி
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட உத்தியோகபூர்வ ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் முற்றிலுமாக மீறியுள்ளது.
டொலர் மோசடி
குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக 8 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணிக் கையிருப்பை பராமரிக்க இலங்கை உறுதிபூண்டிருந்தபோதிலும், தற்போதைய நிர்வாகம் அதை அடைவதில் தோல்வியடைந்துள்ளது.

அத்துடன் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடியானது, வெளிநாட்டுக் கடன்களைத் தீர்ப்பதற்கு வழிவகை செய்யும் மத்திய வங்கி திருத்தச் சட்டத்தை நேரடியாக மீறுவதற்கு ஒப்பானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.