இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது - சிக்கிய போலி ஆவணங்கள்
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் இலங்கை வருவதற்கு முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சிக்கிய போலியான ஆவணங்கள்
இவர் தனது இலங்கை குடியுரிமையை மறைத்து, போலியான ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டு பெற்று வெளிநாடு செல்ல முயன்றபோது விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் பிடிப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த 2001 ஆம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டு மூலம் இந்தியா சென்ற நிலையில், தற்போது இந்திய குடியுரிமை பெற்ற பெண் போல் இந்திய கடவுச்சீட்டு மூலம் மீண்டும் இலங்கைக்கு வர முயன்றதும் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் குறித்த பெண்ணை சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆவணங்கள் பறிமுதல்
அதன்படி மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை நடத்திய போது, அவர் இலங்கையை சேர்ந்த 58 வயதான மெரினா ஆனி என்றும், கடந்த 2001ம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டு மூலம் இந்தியா வந்ததும், அதன் பிறகு குவைத் சென்று பின்னர் 2003ம் ஆண்டு விருதுநகரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு மீண்டும் இந்தியா வந்து விருது நகரில் குடியேரியதும் தெரியவந்துள்ளது.
இதன்பின்னர் இந்திய குடியுரிமை ஆவணங்களான ஆதார் கார்டு, வங்கி அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என்பன பெற்று, தன்னை இலங்கை பெண் என்பதை மறைத்து இந்திய கடவுச்சீட்டு பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அவரிடம் இருந்து இந்திய நாட்டின அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
You may like this..