அரச ஊழியர்களின் மேலதிக நேரக்கொடுப்பனவு மற்றும் மாத சம்பளம் குறித்து வெளியிடப்படவுள்ள விசேட சுற்றறிக்கை
அரச ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பிலான விசேட சுற்றறிக்கை எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை நிதி அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களின் மேலதிக நேரக்கொடுப்பனவு
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக நேரம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்காலத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கை வேறுபட்டதாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்பட்டுள்ள பணத்தின் ஒரு பகுதி அரசாங்க ஊழியர்களின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
