50 ஆயிரத்தால் அதிகரிக்கும் அரச ஊழியர்களின் சம்பளம்..! நிதி தொடர்பில் கேள்வி எழுப்பும் பந்துல
2022ஆம் ஆண்டில் வங்குரோத்து அடைந்த நாட்டைப் பொறுப்பேற்பதற்கு யாரும் முன்வராத சந்தர்ப்பத்தில் அவர் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்று நாட்டைக் காப்பாற்றியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான்(Ranil Wickremesinghe) என்று போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வற் வரியை அதிகரிப்பீர்களா..??
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாம் ஆட்சிக்கு வந்தால் அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 ஆயிரத்தால் கூட்டுவோம். ஓய்வூதியக்காரர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவால் ஓய்வூதியத்தை அதிகரிப்போம், சிரேஷ்ட பிரஜைகளுக்கு 25 வீத வட்டியை வழங்குவோம், பாடசாலை மாணவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவோம் போன்றவாறான கதைகளை எம்மாலும் கூற முடியும்.
இவ்வாறு செய்வதற்கு நிதி எங்கே இருக்கின்றது? யாராவது இவ்வாறு செய்வோம் எனக் கூறுவார்களாக இருந்தால் எங்கிருந்து நிதியைப் பெறுவது என்பதை அவர்கள் காட்ட வேண்டும்.
இவ்வாறு வழங்குவதற்கு எங்கிருந்தாவது நிதியைத் தேடிக் கொள்ள வேண்டுமே. அதாவது, வற் வரியினை 30, 40 வீதங்களால் அதிகரித்தா நிவாரணம் வழங்கப் போகிறீர்கள்.
இதைத்தான் மொண்டிசூரி கதைகள் என்பது. சஜித் பிரேமதாச(Sajith Premadasa) அல்ல அனுரகுமார திசாநாயக்க(Anura kumara Dissanayakke) போன்றோர் இந்தத் தரவுகளை அனுமதிக்காவிட்டால் அவர்கள் மேற்கொள்ளும் மாற்று நடவடிக்கைகள் என்ன என்பதைக் கூற வேண்டும். அவர்கள் அவ்வாறு எதையும் கூறப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |