பல இலட்சங்களால் அதிகரிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் : தலை சுற்றவைக்கும் விபரம்
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 70 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
இலட்சக்கணக்கில் சம்பளம்
இது குறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்,
மத்திய வங்கியின் துணை ஆளுநர் ஒருவரின் சம்பளம் 7 இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய ஊழியர்களின் சம்பளம் 5 இலட்சம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் அறிந்த படி அலுவலக சிற்றூழியர் ஒருவரின் சம்பளம் 1 இலட்சத்து 83 ஆயிரம் ரூபாவாக தற்போது காணப்படுகின்றது.
மேலும், இப்படி நியாயமற்ற முறையில் சம்பள அதிகரிப்பை வழங்க மத்திய வங்கிக்கு எப்படி முடியுமாக உள்ளது.
இதற்கெல்லாம், கடந்த காலங்களில் மத்திய வங்கிக்கு அரசாங்கம் வழங்கிய அதிகாரம் தான் காரணம். அதிகாரம் பாவிக்கப்படுவது அவர்களுக்காகவே அன்றி நாட்டு மக்களுக்காக அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
