2 ஆயிரம் ரூபாவிற்கும் மேல் உயர்ந்த கரட்டின் விலையில் திடீர் மாற்றம்
கடந்த காலங்களில் 2000 ரூபாவிற்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட கரட் ஒரு கிலோ கிராமின் விலை இன்றையதினம் சடுதியாக குறைவடைந்துள்ளது.
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் இன்றைய(18) நிலவரப்படி கரட் ஒரு கிலோ கிராமின் மொத்த விலை 360 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
வீழ்ச்சியடைந்த கரட்டின் விலை
மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பினால் நுகர்வோரின் கொள்வனவு நிலை இன்னும் வழமைக்கு திரும்பாத காரணத்தினாலும் கரட் உற்பத்தி அதிகமாகியிருப்பதாலும் சந்தையில் கரட்டின் விலை குறைந்துள்ளது.
தற்போது நுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவுவதால் மலையகத்தில் மரக்கறி உற்பத்தி முன்னரைப் போன்று சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கிட்டத்தட்ட அனைத்து மரக்கறி வகைகளின் விலைகளும் மலையகத்தில் குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |