அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தவறினால் பணம் இல்லை
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் தகுதியுடைய அனைவருக்கும் வெளியாரின் தலையீடுகள் இன்றி நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெற வேண்டுமானால் தகுதியுடைய அனைவரும் மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
இரண்டாவது கட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
இதற்கு விண்ணப்பிக்காத எவருக்கும் நலன்புரி நன்மைகள் கிடைக்காதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்றும் நடவடிக்கை கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகியது.
அஸ்வெசும முதல் கட்டத்துக்கான விண்ணப்பங்களை அனுப்பாத மற்றும் குடும்பங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த ஆனால் வீட்டுத் தகவல் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படாத அனைவரும் இரண்டாவது கட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் தகுதியுடைய அனைவருக்கும் வெளியாரின் தலையீடுகள் இன்றி நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |