அரச சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு
அனைத்து அரச சேவைகளுக்கும் ஒன்றிணைந்த பொறிமுறையொன்றை அமைப்பதற்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய சபையின் உப குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக உப குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அரச சேவையில் பிரதான செயற்திறன் குறிகாட்டிகளை (KPIs) ஸ்தாபிப்பதற்கான கொள்கைகளை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உப குழு அண்மையில் (08) கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சவாலான விடயம்
நாட்டின் அரச பொறிமுறையுடன் தொடர்புடைய சேவைகள் ஒருங்கிணைந்ததாக செயற்படுவதற்கு காணப்படும் சட்டரீதியான தடைகள் தொடர்பிலும், தற்பொழுதுள்ள பிரதான செயற்திறன் குறிகாட்டிகளையும் கருத்தில் கொள்ளும் போது அந்தந்த நிறுவனங்களுக்குத் தனித்துவமான வேறுபாடுகள் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அனைத்து அரச சேவைகளுக்கும் சமனாக செயற்படுத்தக்கூடிய பிரதான செயற்திறன் குறிகாட்டிகளை உருவாக்குவது சவாலானது.
அதற்கு மேலதிகமாக பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் போது மிகவும் வினைத்திறனான அரச சேவையொன்றைக் கட்டியெழுப்புவது தொடர்பான கொள்கைரீதியான முன்மொழிவுகளைத் தேசிய பேரவை ஊடாக நாடாளுமன்றத்துக்கு முன்வைத்து அனுமதியைப் பெற்றுக்கொள்வது தனது குழுவின் நோக்கமாகும் என நாமல் மேலும் தெரிவித்தார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 15 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri
