அரசாங்கம் வெள்ளைக்காரர்களின் உள்ளாடைகளை அணியாது! மதுர விதானகே
தமது அரசாங்கம் வெள்ளைக்காரர்களின் உள்ளாடைகளை அணியப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றின் பிரகாரம் விஜயன் நாட்டுக்கு வந்த போது குவேணி ஆடை நெய்து கொண்டிருந்தார் என கூறப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கம் வெள்ளைக்காரர்களின் உள்ளாடைகளை அணியும் அரசாங்கமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியானது ஏனையவர்களினது உள்ளாடைகளை அணிவதுடன், பெண்கள் அணியும் ஆடைகளை அணிவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாக உள்ளாடைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் அதிகளவு கருத்து வெளியிடத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam