வட் வரி பதிவுக்கான உச்ச வரம்பை மாற்றும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வி
பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாக, பெறுமதி சேர் வரி (VAT) பதிவுக்கான 60 மில்லியன் ரூபா வரம்பை மாற்றும் முயற்சியை அரசாங்கம் கைவிட்டுள்ளது.
அது தொடர்பான அறிவித்தலை தனது X சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இது பொதுமக்களின் வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சூதாட்ட விடுதிகளுக்கு எதுவித வரியும் விதிக்காத
அத்துடன், பெறுமதி சேர் வரிக்கு பதிவு செய்யத் தவறிய வணிகங்களுக்கு 1 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வந்த நிலையில் அந்த முயற்சியையும் கைவிட்டுள்ளதாக ஹர்ஷ டி சில்வா பதிவிட்டுள்ளார்.

பெறுமதி சேர் வரிக்கு ((VAT)) பதிவு செய்யாததற்காக உங்கள் வர்த்தக நிலையங்களுக்கு 10 லட்சம் ரூபா அபராதம் விதிக்க இந்த அரசாங்கம் தயாராக இருந்தது. ஒன்லைன் சூதாட்ட விடுதிகளுக்கு எதுவித வரியும் விதிக்காத அதே அரசாங்கம், பெறுமதி சேர் வரியை வசூலித்து அதைத் திரும்பத் தராத அதே அரசாங்கம்தான் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
அவர்கள் விளம்பரப்படுத்தும் 18வீத வரியை அல்ல, உண்மையில் 22வீத வரியை விதிக்கும் அதே அரசாங்கம், வரி அறிவிடுவதற்கான தளத்தை விரிவுபடுத்துவது சரிதான், ஆனால் அது நியாயமானதாக இருக்க வேண்டும்.
அதிகாரம் படைத்தவர்கள் சுதந்திரமாக நடமாட, சிறு வணிகர்கள் நசுக்கப்படும் ஒரு நடைமுறை இருக்கக்கூடாது. நாங்கள் அதற்கு எதிராக COPFஇல் குரல் எழுப்பினோம். நாங்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினோம். 95வீத பொதுமக்களின் பதில்கள் இது தவறு என்றே கூறின. இன்று அரசாங்கம் பின்வாங்கியுள்ளது.
வரம்பு 6 கோடி ரூபாவாகவே உள்ளது. அது அவர்களின் வெற்றி அல்ல. அது உங்கள் வெற்றி என்றும் அவர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.