கூட்டு எதிரணியினரின் பேரணி ஊடாக இந்த அரசாங்கத்தை கவிழ்க்கவே முடியாது! லால்காந்த சூளுரை
கூட்டு எதிரணியினரின் பேரணி ஊடாக இந்த அரசைக் கவிழ்க்க முடியாது என அமைச்சர் கே.டி.லால்காந்த தெரவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "அரசுக்கு எதிரான கூட்டு எதிரணியினரின் நுகேகொடைப் பேரணி வெற்றியளிக்க வேண்டும் எனப் பிராத்திக்கின்றேன்.
ஏனெனில், பொதுமக்களுக்குப் பயனற்ற ஒன்றாக அது உள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டு எதிரணியினர் பேரணியை நடத்துவதால் பாதாள உலகக் கோஷ்டியையோ அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தையோ தடுக்க முடியாது.
பொதுமக்களது ஆதரவு
எனவே, அது பொதுமக்களுக்குப் பயனளிக்கும் ஒரு விடயமாக இருக்காது. அதிக சவால்கள் நிறைந்தது.

எனவே, பொதுமக்களுக்குப் பலனளிக்காத ஒரு விடயத்துக்குப் பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். பொதுமக்களது ஆதரவு இல்லாத மேற்படி விடயத்தால் எதுவித நன்மையும் ஏற்படப் போவதில்லை.
கூட்டு எதிரணியினரின் பேரணி ஊடாக இந்த அரசைக் கவிழ்க்க முடியாது. இந்த அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலமிக்க மக்கள் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்டது என்பதை எதிரணியினர் உணர்ந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam