கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு அரச விருது! கௌரவிக்கப்பட்ட தமிழ் கலைஞர்

Sri Lankan Tamils Sri Lankan Peoples
By Dhushi Oct 29, 2026 01:34 PM GMT
Report

இலங்கைத் தமிழ் இலக்கியம், கவிதை மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் துறைகளில் தனது தனித்துவமான பங்களிப்புகளை வழங்கிவரும் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு, 2026ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது ஆற்றுகை பிரிவில் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நேற்று(28.10.2026) மட்டக்களப்பில் இடம்பெற்ற கிழக்கு மாகாண இலக்கிய விழா - 2026 நிகழ்விலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு Golden River Hotel அரங்கில் இடம்பெற்ற இந்த விழாவில், பொத்துவில் அஸ்மினுக்கு விருதுச் சின்னமும் சான்றிதழும், பணப்பரிசும் வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.

இளங்கலைஞர் அரச விருது

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில், பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆற்றுகைக் கலைத் துறையில் பொத்துவில் அஸ்மின் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு அரச விருது! கௌரவிக்கப்பட்ட தமிழ் கலைஞர் | Government Award For Poet Pothuvil Asmin

கிழக்கு மாகாணத்தின் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் பங்களித்து வரும் இளம் படைப்பாளர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் நோக்கில் வழங்கப்படும் இந்த விருது, அவரது நீண்டகால கலைப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.

இவ்வாண்டு ஆற்றுகைக் கலைப் பிரிவில் ஐந்து இளம் கலைஞர்கள் விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் பொத்துவில் அஸ்மினும் ஒருவராவார். கவிஞர் பொத்துவில் அஸ்மின், இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில் கவிஞராகவும் பாடலாசிரியராகவும் ஊடகவியலாளராகவும் அறியப்பட்டவர்.

1997ஆம் ஆண்டு தனது இலக்கியப் பயணத்தை ஆரம்பித்த இவர், கவிதை, பாடலாசிரியர் பணி மற்றும் தொலைக்காட்சி ஊடகத் துறைகளில் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகிறார். இவரது கவிதைப் படைப்புகளில் ‘விடை தேடும் வினாக்கள்’ (2001), ‘விடியலின் ராகங்கள்’ (2002), ‘பாம்புகள் குளிக்கும் நதி’ (2013) ஆகிய கவிதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை.

ஊடகத்துறையில் கால்பதிப்பு

இலங்கைத் தேசிய தொலைக்காட்சியில் 2009 முதல் 2022 வரை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றிய இவர், கலை இலக்கிய நிகழ்ச்சிகளின் தயாரிப்பிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இவர் தயாரித்த ‘தூவானம்’ கலை இலக்கிய இதழ் நிகழ்ச்சி மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. திரைப்படப் பாடலாசிரியராகவும் தனது படைப்பாற்றலை விரிவுபடுத்தியுள்ள இவர், இலங்கை மற்றும் இந்தியத் தமிழ்த் திரைப்பட இசைத்துறைகளிலும் பங்களித்து வருகிறார்.

கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு அரச விருது! கௌரவிக்கப்பட்ட தமிழ் கலைஞர் | Government Award For Poet Pothuvil Asmin

கவிதை மற்றும் பாடலாசிரியர் துறைகளில் தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள பொத்துவில் அஸ்மின், 2001ஆம் ஆண்டு ஜனாதிபதி விருது, 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதுகள், 2015ஆம் ஆண்டு எடிசன் விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார்.

மேலும், கம்போடியாவில் 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கவியரசு கண்ணதாசன் விருதையும் பெற்றுள்ள இவர், இலங்கைத் தமிழ் இலக்கியத்தையும் கலையையும் சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் படைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான இலக்கிய விழாவில், தமிழ் மொழிப் பிரிவில் 41 பேரும் சிங்கள மொழிப் பிரிவில் 10 பேரும் என மொத்தம் 51 பேர் பல்வேறு விருதுகளுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

தமிழ் மொழிப் பிரிவில் சிறந்த நூல்களுக்கான நற்பரிசுகள், மூத்த கலைஞர்களுக்கான வித்தகர் விருதுகள் மற்றும் இளம் கலைஞர்களுக்கான இளங்கலைஞர் விருதுகள் வழங்கப்பட்டன.

கலை பயணத்தின் ஓர் ஆரம்பம்

இலக்கியம், ஆற்றுகைக் கலை, ஊடகம், நுண்கலை, பல்துறை, நாட்டாரியல் மற்றும் குறும்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமது பங்களிப்புகளை வழங்கிவரும் கலைஞர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு அரச விருது! கௌரவிக்கப்பட்ட தமிழ் கலைஞர் | Government Award For Poet Pothuvil Asmin

பொத்துவில் மண்ணிலிருந்து தனது கலைப் பயணத்தை ஆரம்பித்து, கவிதை, பாடலாசிரியர் பணி மற்றும் ஊடகத்துறை வழியாகத் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ள கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வழங்கப்பட்டுள்ள இவ்விருது, அவரது கலைப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகின்றது.

கலைஞர்களின் படைப்பாற்றலையும் சமூகப் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் இத்தகைய விருதுகள், இளம் படைப்பாளர்களுக்குப் புதிய உத்வேகத்தையும் ஊக்கத்தையும் வழங்குகின்றன.

ஆற்றுகைக் கலைப் பிரிவில் 2026ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருதைப் பெற்றுள்ள கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு இலக்கிய ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நாமலை பொறிக்குள் சிக்க வைத்துள்ள ஜோன்ஸ்டன்! நிலைகுலையும் ராஜபக்ச சாம்ராஜ்யம்

நாமலை பொறிக்குள் சிக்க வைத்துள்ள ஜோன்ஸ்டன்! நிலைகுலையும் ராஜபக்ச சாம்ராஜ்யம்

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை : விடுக்கப்பட்ட அழைப்பு

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை : விடுக்கப்பட்ட அழைப்பு



மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US