மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை : விடுக்கப்பட்ட அழைப்பு

Batticaloa SL Protest Eastern Province
By Kumar Oct 29, 2026 01:00 PM GMT
Report

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் நீண்டகாலமாகத் தொடர்ந்து இடம்பெற்று வரும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு  சம்பவங்களைக் கண்டித்தும், நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி,  திங்கட்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வர்த்தகர்கள் சங்கம் மற்றும் பல்வேறு தரப்பினருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்று(29.10.2026) மட்டு.மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

முக்கிய கோரிக்கைகள் முன்வைப்பு

இந்த சந்திப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை : விடுக்கப்பட்ட அழைப்பு | Mayilathamadu Madhavanai Land Issue Protest

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை என்பது தலைமுறை தலைமுறையாகக் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் பொருளாதார அடித்தளமாகும். எனினும், அண்மைக்காலமாக இங்குள்ள மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால், கால்நடைகள் விவசாயப் பயிர்ச்செய்கை நிலங்களுக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் இடையே தேவையற்ற முரண்பாடுகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், இரு தரப்பினரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும், பண்ணையாளர்கள் கடத்தப்பட்டுத் தாக்கப்படுவதுடன், அவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன. ஜனாதிபதி முதல் மாவட்ட அரச அதிகாரிகள் வரை பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகள் கூட இதுவரை முறைப்படி நடைமுறைப்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் மற்றும் கிழக்கு மாகாண நில வளங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளைச் சட்டப்படி உடனடியாக நடைமுறைப்படுத்துதல், மேய்ச்சல் நிலங்களின் உரிய பயன்பாட்டை உறுதிப்படுத்தி வர்த்தமானி பிரகடனத்தை வெளியிடுதல் மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் தொடர்பாகச் சட்டரீதியான விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தல் என்பன அவசியமாகும்.

நீதிக்காக ஒன்றிணைய அழைப்பு

இது வெறுமனே பண்ணையாளர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல என்றும் நில உரிமை, உணவுப் பாதுகாப்பு, மனித உரிமைகள், சமூக நல்லிணக்கம் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் பாதுகாப்பிற்கான போராட்டம் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை : விடுக்கப்பட்ட அழைப்பு | Mayilathamadu Madhavanai Land Issue Protest

 இன, மத, மொழி மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் நீதிக்காக ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்திற்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியம், அறம் அமைப்பு, மட்டக்களப்பு மாவட்ட கால்நடை கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், மயிலத்தமடு மாதவனை கால்நடை வளர்ப்போர் கமநல அமைப்பு, கமக்கார அமைப்புக்களின் மாவட்ட அதிகார சபை, கிழக்கு மாகாண மீனவத் தொழிற்சங்கம், கிழக்கு மாகாண இந்துக் குருமார்கள் ஒன்றியம், மண்முனை மேற்கு விவசாய சம்மேளனம், மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியம், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் மற்றும் படைப்பாற்றலுக்கான வானவில் தூண்கள் வலையமைப்பு ஆகிய பல்வேறு அமைப்புகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

எனவே, நவம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள இப்போராட்டத்தில் சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், மதத் தலைவர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

நாமலை பொறிக்குள் சிக்க வைத்துள்ள ஜோன்ஸ்டன்! நிலைகுலையும் ராஜபக்ச சாம்ராஜ்யம்

நாமலை பொறிக்குள் சிக்க வைத்துள்ள ஜோன்ஸ்டன்! நிலைகுலையும் ராஜபக்ச சாம்ராஜ்யம்

இரவு வேளையில் முன்னாள் அமைச்சரின் வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார் - தப்பியோடிய பிரதான நபர்

இரவு வேளையில் முன்னாள் அமைச்சரின் வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார் - தப்பியோடிய பிரதான நபர்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US