அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் எச்சரிக்கையை நிராகரித்த இலங்கை அரசாங்கம்
இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை.எனவே நாட்டு மக்கள் பீதியடையத் தேவையில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி தவறான பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன. எனினும் இது தொடர்பில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வலியுறுத்தினார்.
பாதுகாப்பு அமைச்சகம், ஆயுதப்படைகள் மற்றும் பிற சட்ட அமுலாக்க நிறுவனங்கள் தேசிய பாதுகாப்பை உறுதிச்செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை குறித்த புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கையும் சேர்க்கப்பட்டிருந்தது.
இது குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தரப்பு இலங்கையின் தீவிரவாத
அச்சுறுத்தல் மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று
தெளிவுப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.