அரசாங்கம் பத்து பேருக்கு மட்டுமே பேசுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது
அரசாங்கம் பத்து பேருக்கு மட்டுமே பேசுவதற்கு அதிகாரம் வழங்கியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமனாத் சீ தொலவத்த தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமை தொடர்பில் சுட்டிக் காட்டும் போது மக்களுடன் அரசாங்கம் கோபித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதனால் அவர்கள் தங்களது பணிகளை முன்னெடுக்க அஞ்சுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அரச சேவை ஒட்டு மொத்தமாக ஸ்தம்பித நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கால் தவறி கீழே விழுந்த கடுவல நகரசபையின் நகர பிதா ரஞ்சன் ஜயலால், தாம் விழுந்தமைக்கு சூழ்ச்சியே காரணம் என கூறியதாக தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அவருக்கு தும்மல் ஏற்பட்டாலும் அதனையும் சூழ்ச்சி எனக் கூறுவார் என தொலவத்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க தரப்பில் பத்து பேருக்கு மட்டுமே பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் எதிர்காலத்தில் ரஞ்சன் ஜயலால் போன்றவர்களும் பேசுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
