மீண்டும் மகிந்த தலைமையில் அரசாங்கம்! மகிந்தானந்த சவால்
எதிர்காலத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை அமைக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கின்றன
கண்டியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்றில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலுக்கு செல்ல இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கின்றன. மார்ச் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும். அதற்கும் இன்னும் காலம் இருக்கின்றது.
மீண்டும் மகிந்த தலைமையில் அரசாங்கம்
தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடியை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஓரளவுக்கு சரி செய்து விடலாம் என நாங்கள் நம்புகிறோம்.
மீண்டும் நாட்டை புதுப்பித்து கட்சியை முன்நோக்கி கொண்டு சென்று மீண்டும் மகிந்த ராஜபக்ச தலைமையில் எமது அரசாங்கத்தை அமைக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.