கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை (Photos)

Kilinochchi Douglas Devananda Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Kajinthan Oct 27, 2023 01:42 PM GMT
Report

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது இன்று (2023.10.27) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் கடத்தல் மற்றும் வனங்களில் மரங்களை வெட்டுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும், சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தி சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் இந்த கூட்டத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தலைவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் இலங்கையர்கள்(Photos)

பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் இலங்கையர்கள்(Photos)

சட்டவிரோத நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தின் கார்மாநாடு, கல்லாறு, கிளாலி, முருசுமோட்டை, குடமூர்த்தி, உமையாள்புரம் அக்கராயன்குளம் மற்றும் குஞ்சுப்பரந்தன் உட்பட பல பிரதேசங்களில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் பல காண்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை (Photos) | Government Action Stop Sand Mining Kilinochchi

பொலிஸ் மற்றும் இராணுவம் இதனுடன் தொடர்புடைய திணைக்களங்களுடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த இக்கூட்டத்திலே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட 158 டிப்பர் ரக வாகனங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களும்கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அரச உயர் அதிகாரிகள் சிலர் கூட டிப்பர் வண்டிகளை பயன்படுத்தி மணல் கடத்தலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

புதிய திட்டங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலை நாட்களில் காலை 7 மணி முதல் 8 மணி வரையும், பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் முறிகண்டியில் இருந்து கிளிநொச்சி நகர எல்லை உட்பட பரந்தன் சந்தி வரை டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்தை நிறுத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய நேர எல்லைக்குள் ஏனைய வாகனங்களின் வேக வரம்பை மணிக்கு 40 கி.மீ ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டதுடன், இந்த விதிகளை மீறும் சாரதிகள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை (Photos) | Government Action Stop Sand Mining Kilinochchi

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் சூரிய சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மின்சாரம், நீர்ப்பாசனம், வீடமைப்பு, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், எதிர்காலத்தில் அமுல்படுத்த எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் மற்றும் இங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் வடமாகாணத்தில் 25,000 நிரந்தர வீடுகளை நிர்மாணித்தல், சூரிய சக்தி மற்றும் மின்சார உற்பத்தித் திட்டங்கள் உட்பட மக்களுக்கு பயனளிக்கும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்பு திணைக்களங்களின் தலைவர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கொழும்பில் பதற்றம்! பலர் கைது - பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு(Video)

கொழும்பில் பதற்றம்! பலர் கைது - பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு(Video)

தமிழக கடற்தொழிலாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு (Photos)

தமிழக கடற்தொழிலாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு (Photos)

GalleryGallery
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US