பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் இலங்கையர்கள்(Photos)
பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் இன்றுடன் பல நாட்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில் யுத்தத்தினால் இதுவரையில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் மக்கள் உயிரிழந்துள்ளனர் .
இந்த நிலையில் இன்றும் இலங்கையின் சில இடங்களில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணம்
அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (27.10.2023) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஜும்மா தொழுகையினை தொடர்ந்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் மெளலவிகள், முஸ்லிம் வர்த்தகத்தினர், நலன்விரும்பிகள் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அம்பாறை - கல்முனை
பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை வாழ் மக்களினால் போராட்டம் மற்றும் துஆ பிரார்த்தனைகள் இன்று (27) கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலின் அருகில் இடம்பெற்றுள்ளது.
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனையில் ஒன்று கூடிய பொது மக்கள் கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகில் பல்வேறு சுலோகங்களை ஏந்தி துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டு அமைதியான முறையில் கலைந்து சென்றுள்ளனர்.
அத்துடன் கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலில் இலங்கை மற்றும் பாலஸ்தீன் கொடிகளை பொதுமக்கள் ஏந்தியிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி - சிஹான் பாரூக்