தரம் குறைந்த மருந்துகள் தொடர்பில் அரசாங்கத்தின் துரித நடவடிக்கை: பிரதி அமைச்சர் விளக்கம்
தரம் குறைந்த மருந்துகளை கொள்வனவு செய்து மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை முறியடிக்க எமது அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்திருக்கின்றது என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் திருகோணமலை வீதியில் இன்று (31.10.2025) அரசு ஒசுசலவின் 67ஆவது கிளையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,
இந்தப் பிரதேச மக்களின் நீண்டகால தேவையாக இருந்த அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கிளையின் அவசியம் சுமார் 50 வருடங்களின் பின்னர் நிறைவேறியிருப்பதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அரசாங்கம் துரித நடவடிக்கை
எதிர்காலத்தில் இந்த நாட்டு சிறந்த வைத்திய வசதிகளை பெற்றுக் கொடுக்கவும் தரமான மருந்து பொருட்களை இறக்குமதி செய்து கொடுக்கவும். அரசாங்கம் கூடிய முயற்சி எடுத்து வருகின்றது.

கடந்த காலங்களில் சுகாதார அமைச்சர்களாக செயற்பட்டவர்கள், தரம் குறைந்த மருந்துகளை கொள்வனவு செய்து மக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள். இந்தக் கொள்ளைகளை முறியடிக்க எமது அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

எதிர்காலத்திலும் இந்த நாட்டில் ஊழல் மோசடிகளை தவிர்த்து இந்த நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல பிரஜைகளாக வருவதற்கு தேவையான சகல வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக தலைமையிலான அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 





 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        