அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக மட்டுமே ஆண்டுதோறும் சுமார் 900 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சகத்தின் 4 சேவை பிரிவுகளின் கீழ் 223 பேரின் நியமன விழாவில் நேற்று (14) கலந்துகொண்டபோது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொதுமக்கள் செலுத்தும் வரி
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட செலவுகள் அனைத்தும், இந்த நாட்டில் பொதுமக்கள் செலுத்தும் வரி வருவாயிலிருந்து ஈடுசெய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.

எனவே, அரச நிதிகள் தொடர்பான நல்ல புரிதலுடனும் பொறுப்புணர்வுடனும் தமது கடமைகளை ஆற்றுவது ஒவ்வொரு அரச ஊழியரின் கடமையாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மாத இறுதிக்குள் 1,600 முதன்மை நிலை மருத்துவ அதிகாரிகள் சுகாதார அமைப்பில் நியமிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சம்பளத் திருத்தங்களால் புதிய நியமனம் செய்யப்படுபவர்களும் பயனடைவார்கள் என்றும், ஜனவரி மாதம் அடிப்படைச் சம்பள உயர்வும், ஜூலை மாதம் முதல் கொடுப்பனவுகளில் உயர்வும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.