கோட்டாபயவின் இயற்கை விவசாய மோசடி: விசாரணைகள் ஆரம்பம்

Gotabaya Rajapaksa Sri Lanka China
By Amal Dec 24, 2024 07:45 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) காலத்தில் சீனாவில் இருந்து உயிர் உரம் இறக்குமதி மற்றும் இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்தியதில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணைகளை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரசாயன விவசாயத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் விதித்த தடையால்,  விவசாயத் துறையில் ஏற்பட்ட நெருக்கடியின் மத்தியில் 2021 இல் சீனாவின் Qingdao Seawin Biotech Group Ltd நிறுவனத்திடம் இருந்து இலங்கை கரிம உரத்தை கொள்வனவு செய்தது.

இருப்பினும், கையிருப்பின் மாதிரிகள் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களால் மாசுபட்டதாகக் கண்டறியப்பட்டதைக் காரணம் காட்டி, அரச நிறுவனங்கள் அதை ஏற்க மறுத்துவிட்டன.

24 மணித்தியாலத்திற்குள் டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் உயர்வு

24 மணித்தியாலத்திற்குள் டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் உயர்வு

உரத் தொகுதிக்கான கொடுப்பனவு

எனினும் சீன நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்தது. குறித்த கரிம உரத்தை மீண்டும் தமது நாட்டுக்கு எடுத்துச் சென்றதுடன், உரத் தொகுதிக்கான கொடுப்பனவையும் கோரியது.

கோட்டாபயவின் இயற்கை விவசாய மோசடி: விசாரணைகள் ஆரம்பம் | Gotta Agriculture Failure Probe

இதன்போது, குறித்த விவகாரம் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வணிக ரீதியான சர்ச்சைக்கும், ராஜதந்திர சர்ச்சைக்கும் வழிவகுத்தது.

இந்த சர்ச்சையை தவிர்கும் வகையில், அரசாங்கம் 6. 9 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 1,382 மில்லியன்), சீன நிறுவனத்துக்கு செலுத்தியது.

விவசாயிகளிடையே அமைதியின்மை

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த கணக்காய்வாளர் நாயகம், தனது அறிக்கையில், இந்தக் கொடுக்கல் வாங்கலில் விவசாய அமைச்சு, விவசாய இராஜாங்க அமைச்சு, கொழும்பு கொமர்ஷல் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் மற்றும் சிலோன் பெர்டிலைசர் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், தமது கடமைகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, குறித்த கொடுக்கல் வாங்கல் குறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்படும் என்று பிரதி விவசாய மற்றும் கால்நடை அமைச்சர் நாமல் கருணாரத்ன ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் இயற்கை விவசாய மோசடி: விசாரணைகள் ஆரம்பம் | Gotta Agriculture Failure Probe

2021 இல் தோல்வியடைந்த இயற்கை விவசாயத் திட்டத்திற்கு அப்போதைய அரசாங்கம் 60 பில்லியன் ரூபாய்களை  செலவழித்தது என்றும் அவர் கூறியுள்ளார்

அப்போதைய அரசாங்கம், இரசாயன விவசாயத்தை தடை செய்து இயற்கை விவசாயத்தை நாடியதன் காரணமாக,  பயிர் விளைச்சல் குறைந்து இறுதியில் விவசாயிகளிடையே அமைதியின்மையை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியர்களின் பொறுப்பற்ற செயலால் உயிரிழந்த சிறுவன் - பெற்றோர் பகிரங்க குற்றச்சாட்டு

வைத்தியர்களின் பொறுப்பற்ற செயலால் உயிரிழந்த சிறுவன் - பெற்றோர் பகிரங்க குற்றச்சாட்டு

வாகன இறக்குமதிக்கான புதிய வரி! வெளியாகவுள்ள நிதியமைச்சின் முக்கிய அறிக்கை

வாகன இறக்குமதிக்கான புதிய வரி! வெளியாகவுள்ள நிதியமைச்சின் முக்கிய அறிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US