கோட்டபாயவின் பிடியில் இருந்து 48 மணி நேரத்தில் தப்பிய பிரித்தானிய தமிழன்
2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ரவிகுமார், நீண்டகாலமாக சட்டவிரோத தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவரை விடுவிப்பதற்காக சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா உள்ளிட்டோர் கடுமையான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர்,
தனது தாயாரின் உடல்நிலையை கருத்திற்கொண்டு அவரை கவனித்துக்கொள்வதற்காக இலங்கைக்கு வந்திருந்த ரவிக்குமார், தனது குடும்பத்தினருடன் பிரித்தானியாவில் வசித்து வந்ததார்.
இலங்கைக்கு வந்த பின்னர், தனது வர்த்தக நடவடிக்கைகளின் ஒரு கிளையை உருவாக்கிய அவர், அதில் பணப்பரிமாற்ற நிலையம் ஒன்றையும் நடத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2006ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி இடம்பெற்ற பித்தளை சந்தி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தில், குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பணத்தை ரவிக்குமாருக்கு சொந்தமான பணப்பரிமாற்ற நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, எந்தவொரு நேரடி தொடர்பும் இல்லாத ரவிக்குமாரும் கைது செய்யப்பட்டார். ரவிக்குமார் பொலிஸாரினால் வெள்ளை வானில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் அவர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மொத்தமாக ஏழு பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
குறித்த சட்டப் போராட்டத்தின் ஊடாக 2011ஆம் ஆண்டு ரவிகுமார் விடுதலை செய்யப்பட்டார் என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..