மிக் விமான கொள்வனவு மோசடி விவகாரம்! ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தாயின் கல்லறையை காப்பாற்ற முடியாவிட்டால் நாட்டை பாதுகாப்பாரா என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
மிக் விமானங்கள் கொள்வனவு தொடர்பான வழக்கு தொடர்ந்தால், தன்னை விட ஜனாதிபதிக்கே அதிக பிரச்சினைகள் ஏற்படும் என்றும்,இவற்றை வெளிப்படுத்திய பின்னர் தனக்கு வெள்ளை வான் அனுப்பி வைக்கப்படுமோ என்று தான் சந்தேகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இணைய சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
மக்களுடன் பேசாமல் அறைக்கதவை மூடியதே ஜனாதிபதியின் மிகப் பெரிய தவறு எனவும், அவ்வாறானவரினால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்யவில்லை மாறாக பதவி விலக வைத்தார்.
ராஜபக்சக்களால் நிராகரிக்கப்பட்டவர் கோட்டாபய ராஜபக்ச
ஜனாதிபதி - பிரதமர் கோபம்
தீப்பிடிக்கும் பேருந்தை நிறுத்த முடியாத மனிதன் எப்படி நாட்டைக் காப்பான்?
ஜனாதிபதியின் தாயாரின் கல்லறை தீப்பிடித்தால் நமக்கு என்ன பாதுகாப்பு?
மிக் பரிவர்த்தனை கோப்புகள் இழுக்கப்பட்டால் கோட்டாபயவுக்கு என்னை விட அதிகமான பிரச்சினைகள் வரும்.
கோட்டாபய ஒற்றைக் கருத்துடன் நாட்டை ஆட்சி செய்தார்.மக்களிடம் பேசாது அறைக் கதவை மூடிவிட்டு முடிவுகளை எடுப்பது பொருத்தமற்றது.
ஒருமுறை என்னையும் சிறையில் அடைக்க முயன்றார்கள், இப்போது இதனை சொல்லி வெள்ளை வான் அனுப்புவார்கள் என்றும் இதன்போது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.