கோட்டாபயவின் மனநிலை மாற வேண்டும்: சிறீதரன் அறிவுரை - செய்திகளின் தொகுப்பு(Videos)
தான் இன்னமும் இராணுவ சிந்தனை வாதத்துக்குள்தான் இருக்கிறார் என்பதையும், நீதியான, நியாயமான வழியில் செல்வதற்குத் தயாரில்லை என்பதையுமே கொள்கை விளக்க உரைமூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
"2019 நவம்பர் 18 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது ஜனாதிபதி உரையாற்றியிருந்தார். அதன்பின்னர் 2019 நவம்பர் 30 ஆம் திகதி இந்தியாவுக்குச் சென்று திரும்பும் வேளை இந்து நாளிதழுக்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri