பொறுப்பு உங்களிடமே! அமைச்சர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி கோட்டாபய
அமைச்சரவையின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார்.
அமைச்சுக்களின் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சர்களின் பொறுப்புக்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அமைச்சர்களே அவற்றிற்கு பொறுப்பு கூற வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சில அமைச்சுக்களில் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது போது ஜனாதிபதி எச்சரிக்கைகும் வகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வனஜீவராசிகள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுக்கும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கும் இடையிலான முரண்பாடும் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவின் பதவி விலகல் வரை சென்றுள்ள நிலையில் ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri
