யொஹானியை நேரில் சந்தித்து பாடல் கேட்டு மகிழ்ந்த ஜனாதிபதி கோட்டபாய
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa ) மற்றும் தற்போது பிரபலம் அடைந்துள்ள பாடகி யொஹானிக்கும் (Yohani Diloka de Silva) இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபக்ஷவுடன் (Ioma Rajapaksa) இணைந்திருந்தார்.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதிக்கு யொஹானி சில பாடல்களை பாடியுள்ளார். ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி யொஹானியின் பாடல்களை கேட்டு கைத்தட்டி மகிழ்ந்துள்ளனர்.
மெனிக்கே மகே ஹித்தே பாடல் பாடி புகழ் பெற்ற யொஹானி இந்தியாவுக்கு சென்று இசை நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தி விட்டு நாடு திரும்பியுள்ளார்.
அதன் பின்னர் அவர் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை சந்தித்துள்ளார். இது தொடர்பான காணொளி ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam