நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேபாளத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுத்ரி குழுமம் விடுத்த அழைப்பின் பேரிலேயே அவர் நேபாளத்துக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய கோட்டாபய, நேற்று(23.09.2024) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளார்.
தனிப்பட்ட பயணம்
இதேவேளை அவர் ஜாம்சிகேலில் உள்ள ஹோட்டல் விவாண்டாவில் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த பயணம் அவரது தனிப்பட்ட பயணம் என்பதுடன், இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள சவுத்ரி குழுமத்துடன் ராஜபக்சவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் கோட்டாபய ராஜபக்ச பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தூதரகத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
