மிரிஹானவிலுள்ள தனிப்பட்ட இல்லத்திற்கு திரும்பும் கோட்டாபய: தீவிர அரசியலுக்குள் நுழைவாரா..! செய்திகளின் தொகுப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் நாடு திரும்பியவுடன் மிரிஹானவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு திரும்பும் கோட்டாபய, சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் தீவிர அரசியலுக்குள் வருவதா, இல்லையா என்பது குறித்து அவரது நெருங்கிய தரப்புகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபயவுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை அந்நாட்டில் தங்கியிருக்க சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன் பின்னர் அவர் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,