பொது மக்களுக்கு காய்கறிகளை இலவசமாக வழங்குங்கள் - ஜனாதிபதி கோட்டாபய ஆலோசனை
தொற்று நோய் நிலைமை மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள காய்கறி விவசாயிகளின் அறுவடைகளை அவர்களின் விளை நிலங்களுக்கு சென்று கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் காய்கறிகளை பொதுமக்களுக்கு இலவசமாகவேனும் வழங்க நடவடிக்கை எடுக்குமாாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள காய்கறி விவசாயிகள் தமது அறுவடைகளை விற்பனை செய்ய முடியாத நிலைமையை எதிர்நோக்கி வருகின்றனர். இதன் காரணமாக ஏனைய பிரதேசங்களில் காய்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளது.
பல காய்கறிகளின் சில்லறை விலையானது 250 ரூபாவுக்கும் மேல் அதிகரித்துள்ளதுடன் சில பிரதேசங்களில் கொள்வனவு செய்ய காய்கறிகள் இல்லை.
இந்த நிலையில் மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் நேற்று கலந்துரையாடியுள்ள ஜனாதிபதி, விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை மற்றும் பழங்களை கொள்வனவு செய்து விநியோகிக்கும் பொறிமுறையை உருவாக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri