கோட்டாபய ராஜபக்சவினால் பெரும் ஏமாற்றத்தில் பலர்: வெளியான காரணம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் எழுதப்பட்டு நேற்று (07) வெளியிடப்பட்ட புத்தகம் சில மணித்தியாலங்களில் விற்று தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றும் சதித்திட்டம் குறித்து முன்னாள் ஜனாதிபதி எழுதிய நூல் நேற்று காலை 09 மணியளவில் சந்தையில் வெளியிடப்பட்டு மதியம் 01 மணியளவில் அனைத்து பிரதிகளும் விற்றுத் தீர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக, புத்தகத்தை வாங்கும் நம்பிக்கையில் இருந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாம் பதிப்பு பணிகள்
நாடளாவிய ரீதியில் உள்ள விஜித யாப்பா புத்தகக்கடைகளின் மூலம் இந்நூல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது, அதன் இரண்டாம் பதிப்பு சந்தையில் வெளியாகும் நிலையில், மூன்றாம் பதிப்பின் பணிகளும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri
