கோட்டாபயவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்: ஜோசப் ஸ்டாலின்
கோட்டாபயவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
“கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாட்டிற்கு வந்துள்ளார். எனவே கோட்டாபய தொடர்பில் நீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். விசேடமாக மக்கள் முன்வந்து இதனை செய்ய வேண்டும்.
மக்களுக்க வாழ முடியாத நிலை
மக்களுக்க வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, மக்களுக்கு சாப்பாடு இல்லை. மக்கள் தொடர்பில் ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. பாண் ஒரு இறாத்தல் 300 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்க சரியான போஷாக்கு இல்லை. அது மாத்திரமின்றி மாணவர்கள் தங்களது கல்வியை இழந்துள்ளனர்.
இவை அனைத்திற்கும் முக்கியமான காரணம் கோட்டாபய ராஜபக்ச தான்.
எனவே அவருக்கு எதிராக நீதியான விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி கூறுகின்றோம்” என்றார்.