ஜனாதிபதி ரணில் ஜப்பான் சென்ற பின் இலங்கை வரும் கோட்டாபய ராஜபக்ச
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்ய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் பின்னரே இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி இன்னும் சில வாரங்களுக்கு தாய்லாந்தில் தங்கியிருப்பார் எனவும், கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் இலங்கை வருவார் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தமை பொய்யானது எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு தரப்பினர் அனுமதி
முன்னாள் ஜனாதிபதியின் வருகைக்காக மிரிஹான பகிரிவத்தையில் உள்ள வீட்டிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், அது பொய்யானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்து வந்தடைந்த பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கியிருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதிக்கு பணிப்புரை விடுத்திருந்த நிலையில் அடுத்த வாரம் முதல் விசேட பாதுகாப்பின் கீழ் தேவையான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 20 மணி நேரம் முன்
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam