தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட ஜனாதிபதி ரணில்! மங்கள திருத்தியமைத்த கருத்து
தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நாட்டை மீளக் கட்டியெழுப்புவது ஒரு விடயமல்ல என்று மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவா ஹெங்குனுவெவெ தம்மரதன நாயக தேரர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஒரு விடயம் நடக்க வேண்டுமாயின் தகுதியானவர்களுக்கே அது வழங்கப்பட வேண்டும் என்று உனவடகே கதையில் கூறப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
ரணிலுக்கு ஏற்படுத்தப்பட்ட களங்கம்
அன்று பல தரப்புக்களும், அரசியல்வாதிகளும் ரணிலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினர். தெற்கே போய் பயங்கரவாதி என்றார்கள். நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களே அவ்வாறு கூறினார்கள்.
ரணிலால் முடியாது என்று கூறிய அந்த கருத்தை, ரணிலுக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்பட வேண்டும் என்று கூறி மங்கள சமரவீர அந்த கருத்தை திருத்திக் கூறினார்.
இரண்டு அல்லது மூன்று யுத்தங்கள் இருந்ததை நாங்கள் அறிவோம். 1989 கலவரம், தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் மக்கள் விடுதலை முன்னணி என்பன செயற்பட்டன. ட்ரான்ஸ்போர்மர்கள், தொழிற்சாலைகள் என்பன தீப்பிடித்து எரிந்தன.
இன்று ஒருபக்கம் கோவிட் தொற்று மறுபக்கம் அரசியல் ஸ்திரமின்மை. அதே போல இனவாதம் மதவாதம் அனைத்தும் உள்ளன. நாடு இருந்தாலும் நாட்டில் சட்டம் இல்லாமல் போனதை நாம் அறிவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.