கோட்டாயவினால் வழங்கப்பட்ட உயர் பதவியை பறித்த ரணில்
சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக ஹிமாலி சுபாஷினி டி சில்வா அருணதிலக்கவை நியமிப்பதற்கு நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரிகள் குழு அங்கீகரித்துள்ளது.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட சீ.ஏ.சந்திரபிரேமவின் இடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சந்திரபிரேம என்பவர் “கோட்டாஸ் வோர்” எனப்படும் கோட்டாபயவின் போர் தொடர்பில் புத்தகம் எழுதிய புத்தக ஆசிரியராகும்.
அந்த புத்தகத்தின் காரணமாகவே ஜெனீவாவில் அவருக்கு அந்த உயர் இராஜதந்திர பதவி கிடைத்ததென தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனீவாவில் புதிய நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்படவுள்ள ஹிமாலி சுபாஷினி டி சில்வா அருணதிலக்க இதற்கு முன்னர் நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.





ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri
