மருமகனால் கோட்டாபயவிற்கு காத்திருக்கும் பேரிடி - சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி காணொளி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், அவருக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். அதற்காக அவர் சம்பளம் பெற்றார்.
அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஜனாதிபதித் திட்டத்தை உருவாக்கி அதிலிருந்தும் அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச தனது மருமகன் தொடர்பில் வெளியிட்ட தகவல், அவரின் மருமகன் வழங்கிய வாக்குமூலத்திற்கு முரணாகவுள்ளது. எனவே இதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
மஹிந்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்காது எனது வீட்டில் துண்டித்தது ஏன் என கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்து நீதிமன்றின் உத்தரவு
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri