தப்பிக்கப் போகும் கோட்டா! திரைமறைவில் பெரும் இரகசிய சதிகள் ஆரம்பம்
கோட்டாபய ராஜபக்ச இவ்வளவு காலமும் பலரை ஏமாற்றி வந்தநிலையில் தற்போது நீதிமன்றத்தை ஏமாற்ற முயல்கின்றாரா என்கின்ற சந்தேகம் எழுகின்றது.
கடந்த காலங்களிலே கோட்டாபய பலமுறை நீதிமன்றங்களை ஏமாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜபக்ச குடும்பம் நீதிமன்றத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்து வருகின்றது. உதாரணமாக சொல்லப்போனால் கோட்டாபய ராஜபக்சவிற்கு 2016 ஆம் ஆண்டில் இருந்து மறதி நோய் இருக்கின்றது.அதற்கான வழக்கு ஆதாரமும் இருக்கின்றது.
அத்தோடு, மகிந்த ராஜபக்ச சுகவீனமுற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த விடயம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் அவருடைய கைதில் சிக்கல் ஏற்படலாம்.
தற்போதைய வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க கூடிய வகையில் இருப்பவர் சமல் ராஜபக்ச தான். ஏற்கனவே 50 பேருக்கு எதிரான வழக்குகள் உள்ளன.அதிலே 7பேர் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கின்றனர்.
ஒட்டுமொத்தத்திலே கோட்டாபய ராஜபக்ச தப்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவா அல்லது நோயைக் காரணம் காட்டி அவர் தப்பித்து விடுவாரா என்கின்ற கேள்வி இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.