கோட்டாபயவின் பரிதாப நிலை - வெறுக்கும் உயிர் நண்பர்கள்
ஒரு காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்களாக இருந்த இருவர் தற்போது அவரை நிராகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து முன்னாள் ஜனாதிபதியிடம் இருந்து வரும் அழைப்புகளுக்குக் கூட அவர்கள் பதிலளிப்பதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தொலைபேசி அழைப்புகள் நிராகரிப்பு
கொழும்பில் வாழும் இந்த நண்பர்கள் கோட்டபாய ஆட்சியில் இருந்த போது, தேவையான பல உதவிகளை செய்ததாக மகிந்த குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் புரட்சியால் கோட்டபாய நாட்டை விட்டு தப்பி சென்று வெளிநாட்டில் ஹோட்டல்களில் தங்கியிருந்தார். அதற்கான செலவுகளையும் இந்த நண்பர்களே ஏற்றுக்கொண்டதாக தெரிய வருகிறது.
வெறுக்கும் நண்பர்கள்
எனினும் தற்போது கோட்டபாயவை முற்றாக தவிர்த்து வருதாகவும், பேங்கொக்கில் இருந்து வரும் அழைப்புகளை கூட தவிர்த்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
