இந்து ஆலயத்திற்குள் நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களுக்கு காத்திருந்த பயங்கரம்!
செம்மணி மனித புதைகுழி விவகாரம் பூதாகாரமாகி மனித மனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது.
இந்த நேரத்தில்,முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், மட்டக்களப்பு குருக்கள்மடம் என்ற இடத்தில் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற 72 முஸ்லிம் மக்கள் பற்றிய சர்ச்சையை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தார்.
கொழும்பிலிருந்து கல்முனை வழியாக காத்தான்குடி வந்துகொண்டிருந்த சிறுவர் மற்றும் பெண்கள் உட்பட 72 முஸ்லிம்களை 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி தமிழ் ஆயுததாரிகள் கொலை செய்து குருக்கள்மடம் கடற்கரையில் புதைத்ததாகவே அவர் குற்றஞ்சுமத்தி இருந்தார்.
இந்நிலையில் அந்த 72 முஸ்லிம்களுக்கும் நடந்தது என்ன? குருக்கள்மடம் கடற்கரையில் புதைக்கப்பட்டதாக கூறப்படுவதன் உண்மை தன்மைகளை அலசி ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...,