கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்ட அறிவி்ப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையாகப்போவதில்லை என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி போராட்டம் இடம்பெற்ற போது, ஊரடங்குச் சட்டம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் பிரிதி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மாற்றுக் கொள்கை மையம் உள்ளிட்டவற்றால் தாக்கல் செய்யப்பட்ட 06 மனுக்கள் தொடர்பில் தீர்ப்பளிக்கப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்கிரமா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam