கோட்டாபயவிற்கு சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் எழுதிய கடிதம்!
ஜனாதிபதி கோட்டாபபய ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பங்களிப்பு செய்த ஒரு தரப்பான சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
புதிய தேர்தல் முறையின் கீழ் மாத்திரமே எதிர்வரும் தேர்தல்களை நடத்த வேண்டும் என அந்த அமைப்பு கடிதத்தில் கேட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை கடந்த அரசாங்கம் ஒத்திவைத்தது. அதற்கு வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்கள் எந்த எதிர்ப்பையும் வெளியிடவில்லை என சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாச அமரசேகர கையெழுத்திட்டு அனுப்பியுள்ள அந்த கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனைத்திற்கும் முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் அழுத்தம் கொடுப்பது ஆச்சரியத்திற்குரிய காரணம். நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் நம்பிக்கையை இழக்க செய்யும்.
ஜனாதிபதி நேர்மையாக ஆரம்பித்த புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு இதன் மூலம் பாதிப்பு ஏற்படும். தேர்தலை நடத்துவது சம்பந்தமான பரிந்துரைகள் அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குள் உள்ளடக்கப்படும் முன்னர், அது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை கேட்பது சிக்கலுக்குரியது.
இதனால், புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் புதிய மாகாண சபை அல்லது மாவட்ட நிர்வாக கட்டமைப்புக்கு அமைய மற்றும் புதிய தேர்தல் முறையின் கீழ் மாத்திரமே அடுத்து நடைபெறும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை நடத்த வேண்டும் என நாங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் குணதாச அமரசேகர ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
