சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் கோட்டாபய
சிங்கப்பூரில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடும் போராட்டங்கள் வெடித்தது.
மக்களின் போராட்டம் காரணமாக கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார்.
கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
சிங்கப்பூர் சென்ற கோட்டாபயவுக்கு 15 நாட்கள் அங்கு தங்கியிருக்க விசா வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், குறித்து விசா காலம் முடிவடைந்த பின்னர் மேலும் 15 நாட்களுக்கு கோட்டாபயவின் விசா காலம் நீடிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் கோட்டாபயவின் சிங்கப்பூர் விசா காலம் முடிவடைந்துள்ளது.
தாய்லாந்திற்கு பயணம்
இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
நாட்டுக்குள் அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து விடுக்கப்பட்ட
கோரிக்கையை தாய்லாந்து ஏற்றுக்கொண்ட நிலையில்,முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில்
இருந்து பேங்காக் செல்லும் விமானத்தில் ஏறியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி
வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வரும் கோட்டாபய
தாய்லாந்தில் தங்கியிருப்பதற்கான விசா காலம் முடிந்த பின்னர், எதிர்வரும் நவம்பர் மாதம் அளவில் இலங்கை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேறு நாட்டில் தற்காலிக தங்குமிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால், கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
