கோட்டாபய இலங்கையிலிருந்து வெளியேறினாரா..! இலங்கை விமானப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி நாட்டிலிருந்து வெளியேறியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் இன்று மாலைதீவுக்கு புறப்பட்டு சென்றதாக இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானத்தினூடாக சென்றுள்ளதாக இலங்கை விமானப்படைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியேறிய விடயத்தை பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வெளியான தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக AFP செய்தி முகவரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
கொழும்பில் இருந்து அதிகாலையில் கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் இராணுவ விமானம் புறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கு மத்தியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், இந்த விமானம் மாலைதீவில் உள்ள மாலே நோக்கிச் சென்றதாகவும், குறித்த விமானம் மாலைதீவு நேரப்படி அதிகாலை 2.50 மணிக்கு தரையிறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
| பதவிக்காலம் முடிவதற்குள் இலங்கையை விட்டு தப்பியோடிய முதல் ஜனாதிபதி |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri