கோட்டா கோ ஹோம் போராட்ட பின்னணியில் ராஜபக்ச குடும்பம்: அம்பலமாகும் பசிலின் இரகசிய திட்டம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்காக ராஜபக்ச குடும்பத்தினரால் 'கோட்டா கோ ஹோம்' போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தேசிய அமைப்பு ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த சதி திட்டத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச முக்கிய பங்காற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்ச குடும்பத்தினரின் சதித்திட்டம்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோட்டாபய அரசாங்கத்திற்கெதிராக முன்னெடுக்கப்பட்ட கோட்டா கோ ஹோம் என்ற போராட்டத்தில் கோட்டாபய ராஜபக்சவை விரட்ட ராஜபக்ச குடும்பத்தினர் பல சதித்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்நாட்டின் அடுத்த போராட்டம் உணவு நெருக்கடியுடன் கூடிய வர்க்கப்போராக இருக்கும் எனவும்,குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அமெரிக்கத் தூதுவரின் தாளத்துக்கு ஆடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் இதன் பின்னணியில் இருப்பதாகவும், அவர் ஒரு அமெரிக்க கைப்பாவை என்பதனால் அவர் மீது போர்க்குற்றம் சுமத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  | 
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan